தமிழகம் இந்தியா

ஆசை ஆசையாக காதலித்து திருமணம்! 20 நாட்களில் இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட பரிதாப மரணம்!

Summary:

Young girl commit suicide after 20 days of marriage

ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த மென் பொறியாளராக வேலை பார்த்துவரும் பூர்ணிமா என்ற இளம் பெண்ணும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் கடந்த சில மாதங்களாக காதலித்துவந்துள்னனர். பூர்ணிமாவின் காதல் அவரது பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி பூர்ணிமா அவரது காதலர் கார்த்திகை கடந்த 20 நாட்களுக்கு முன்னர் திருமணம் செய்துள்ளார். இவர்கள் திருமணத்தில் பூர்ணிமாவின் பெற்றோர், உறவினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கடந்த செவ்வாய்க்கிழமை பூர்ணிமா கார்த்திக்கின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர்தான் தங்கள் மகளை கொலை செய்துவிட்டதாக பூர்ணிமாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்னர்.

பூர்ணிமா தற்கொலை செய்துகொண்டாரா? அப்படியென்றால் தற்கொலைக்கான காரணம் என்ன? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் தீவிரமா விசாரித்துவருகின்றனர்.


Advertisement