தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
லாட்ஜில் தங்கிய பெண்ணுக்கு திடீர் ரத்தப்போக்கு.. பின் நடந்த விபரீதம்.. பதறிய மாணவன்.!
அறை
எடுத்து தங்கிய ஜோடி :
தஞ்சை அருகே மதுக்கூர் பகுதியில் வசித்த ஒரு 17 வயது பெண்ணும் பூம்புகாரைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவரும் கும்பகோணத்தில் ஒரு தனியார் விடுதியில் ரூம் புக் செய்து தங்கி இருந்துள்ளனர். இவர்கள் இருவரும் உள்ளே சென்ற சிறிது நேரத்தில் அந்த மாணவன் பதறியடித்து ஓடி வந்து விடுதி ஊழியர்களிடம் அந்த பெண்ணிற்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது என்றும், அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறார்.
கைவிரித்த
மருத்துவர்க்ள் :
இதனைத் தொடர்ந்து ஒரு ஆட்டோவில் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். தனியார் மருத்துவமனைக்கு சென்ற நிலையில் அவர்கள் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அந்த பெண்ணை அனுப்பி வைத்துள்ளனர். அங்கு சென்ற பிறகு மருத்துவர்கள் பெண்ணை பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறி போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி வேன் ஓட்டுனருக்கு மாரடைப்பு; நொடியில் 20 மாணவ-மாணவிகளின் உயிரை காத்த நெகிழ்ச்சி சம்பவம்.!
மாதவிடாய்
மர்மம் :
இது பற்றி போலீசார் அவர்கள் தங்கியிருந்த அறையை பரிசோதித்து பல்வேறு தகவல்களை சேகரித்து முதற்கட்ட விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விசாரணை முடிவில் பெண் எப்படி இறந்தார் என்பது தெரியவரும். அந்த இளைஞர் கூறிய தகவலின்படி அவர்கள் இருவரும் உறவினர்கள் என்றும், இருவரும் கோவிலுக்கு வந்த போது பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டதாகவும் எனவே உடை மாற்றுவதற்காக அவர்கள் அறை எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அப்போது அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்த்ததாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தோல் நோயால் பாதிக்கப்பட்ட கணவர்; பொறுமை தாங்காமல் மனைவி செய்த காரியம்.! சென்னையில் அதிர்ச்சி.!