16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம்.. அடித்து துன்புறுத்திய இளைஞர் கைது!Young cheat and married girl in Ariyalur

அரியலூர் அருகே 16 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்து, அடித்து துன்புறுத்திய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொக்கரணை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் மகன் ராஜு. கட்டிட தொழிலாளியான இவர், 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

Ariyalur

அதன் பின்னர் அந்த சிறுமியை அடித்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த சிறுமி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு  வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த ராஜுவை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.