வசூலில் டாப்.. பாலையா டான்ஸ் வீடியோ வைரல்.! மகிழ்ச்சியில் ஊர்வசியுடன் நடனமாடி குதூகலம்.!
ஆசிரியர்களுக்காக மாணவர்களின் போராட்டம்.! திடீரென தற்கொலைக்கு முயன்ற வாலிபர்.! பாப்பான்விடுதியில் பரபரப்பு.!
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த மாணவனுக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நிலை கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, பின்னர் மாணவனை நேரடியாக வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார்.
வீட்டில் மீண்டும் மாணவனின் உடல்நிலை மோசமானதால் குடும்பத்தினர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பாப்பான்விடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார்.
இந்தநிலையில் அப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர் பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என கூறி நேற்று போராட்டம் நடத்தினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவர்களின் பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவர்களின் பெற்றோர் ஆசிரியர்கள் மீது எந்த தவறும் இல்லை. இரண்டு ஆசிரியர்களின் பணியிடை நீக்கத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இரண்டு ஆசிரியர்கள் மீண்டும் வரும்வரை இந்த போராட்டம் தொடரும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போராட்டத்தில் ஈடுபட்ட பாப்பன்விடுதியை சேர்ந்த சதீஸ் என்ற வாலிபர் திடீரென நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நீர் தேக்க தொட்டியின் மீது ஏறி மயக்க நிலையில் இருந்த வாலிபரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.