தமிழகம்

திருமணமான பெண் மீது இளைஞன் கொண்ட காதல்!. இறுதியில் இளைஞனின் வெறிச்செயல்!.

Summary:

திருமணமான பெண்ணிடம் இளைஞன் திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளான்.

ஏற்கனவே திருமணமான பெண் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுப்பு தெரிவித்ததால், பெண்ணின் கழுத்தை இளைஞர் ஒருவர் பிளேடால் அறுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ராதிகா என்பவர் வேலை பார்த்து வருகிறார். திருமணமான ராதிகாவிற்கும் மருத்துவமனைக்கு பெயின்ட் அடிக்க வந்த போரூரரை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஒரு கட்டத்தில் லோகேஸ்வரனுக்கு, ராதிகாவை மிகவும் பிடித்து அவரிடம் காதலை கூறியுள்ளார். ஆனால் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது என கூறி ராதிகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இருப்பினும் தொடர்ந்து லோகேஸ்வரன் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆனால் ராதிகா எந்தவித இரக்கமும் காட்டாமல் தன்னுடைய வார்த்தையில் தெளிவாக இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த லோகேஷ் மறைத்து வைத்திருந்த பிளேடால், ராதிகாவின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து ரத்தவெள்ளத்தில் சரிந்த ராதிகாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், இதனையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement