பேருராட்சி அதிகாரிகளின் அலட்சியம்.! பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் பரிதாப பலி.!

பேருராட்சி அதிகாரிகளின் அலட்சியம்.! பூங்காவில் விளையாட சென்ற சிறுவன் பரிதாப பலி.!


young boy died in park

தாம்பரம் அடுத்த சக்தி நகர், ஹவுஸிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் வரதன். கூலிவேலை செய்துவரும் இவருக்கு மனைவி நிஷா, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் வரதனின் மூத்த மகன் கவுதம் (8) நேற்று மதியம் வீட்டின் அருகே உள்ள பீர்க்கன்காரணை பேரூராட்சிக்கு உட்பட்ட பூங்காவில் விளையாடுவதற்காக சென்றுள்ளார். 

அங்கு பூங்காவில் இருந்த மின்விளக்கில் வெளியே தெரியும்படி தொங்கி கொண்டிருந்த மின் கம்பி சிறுவன் மீது உரசி உடல்முழுவதும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இந்த நிலையில், விளையாட சென்ற மகன் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் தாய் சிறுவனை தேடி பூங்காவுக்கு சென்றுள்ளார். 

young boy

அப்போது அங்கு பூங்காவில் கவுதம் மின்சார கம்பியை பிடித்தவாறு கீழே விழுந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து அலறல் சத்தம் போட்டுள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் சிறுவன் கவுதமை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இந்தநிலையில், கவுதமின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பீர்க்கன்காரணை பேருராட்சி அதிகாரிகளின் அலட்சிய போக்கே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லவைத்தனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.