தமிழகம் சமூகம்

36 வயது பெண்ணும் 20 வயது இளைஞரும்! கண்டுபிடித்த கணவன்! கள்ளக்காதலியுடன் வாழ முடியாததால் இளைஞர் தற்கொலை

Summary:

கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழமுடியாத சோகத்தில் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளகாதலியுடன் சேர்ந்து வாழமுடியாத சோகத்தில் கல்லூரி மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்துலாபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் மகேஸ்வரன். 20 வயதாகும் மகேஸ்வரன் பெங்களுருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி ஒன்றில் படித்துவந்துள்ளார். இந்நிலையில் கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு வந்த அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 36 வயதான மலர்க்கொடி என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் மலர்கொடியின் கணவருக்கு தெரியவர அவர் இருவரையும் கண்டித்துள்ளார். இங்கு இருந்தால் இவர்கள் நம்மை வாழவிடமாட்டார்கள் என எண்ணிய மகேஸ்வரன் மற்றும் மலர்க்கொடி இருவரும் சமீபத்தில் வீட்டைவிட்டு வெளியேறி பெங்களூருக்கு சென்று குடும்பம் நடத்திவந்துள்ளனர்.

இதனிடையே மகேஸ்வரன் மற்றும் மலர்கொடியின் குடும்பத்தினரிடையே மோதல் வெடிக்க, அவர்கள் மகேஸ்வரனுக்கு போன் செய்து சொந்த ஊருக்கு வருமாறு கூறியுள்ளனர். இதனை அடுத்து பெங்களுருவில் இருந்த கிளம்பிய ஜோடி சொந்த ஊருக்கு செல்லாமல், ஊருக்கு அருகில் இருக்கும் வெள்ளை கரடி என்ற பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயக்கி விழுந்துள்ளனர்.

தோட்டத்தில் இவர்கள் மயங்கி கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி மகேஷ்வரன் உயிரிழந்தநிலையில் மலர்க்கொடி மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement