யோக தர்ஷினியின் காளையை அடக்கிய புதுக்கோட்டை இளைஞன்.! வீரத்தமிழச்சியின் செயலால் கண்ணீர்விட்ட அந்த இளைஞன்.!yogatharshini-jallikattu-bull

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழகம் முழுவதும் பல இடங்களில் நடைபெறுவது வழக்கம்.  இந்தவருடம் முதல் ஜல்லிக்கட்டு விழா புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் ஆரம்பித்தது. தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசல்களை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம்.

தற்போது திருவிழா காலம் என்பதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல இடங்களில் அதிவிமர்சியாக ஜல்லிக்கட்டு விழா நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகப்படியான மாடுபிடி வீரர்களும், அதிகப்படியான காளை உரிமையாளர்களும் உள்ளனர். இதனால் புதுக்கோட்டையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவிற்கு பல மாவட்டங்களில் இருந்து காளைகளை கொண்டுவந்து அவிழ்கின்றனர் காளை உரிமையாளர்கள்.

பல இடங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரையை சேர்ந்த வீரத்தமிழச்சி யோகதர்ஷினி தான் வளர்க்கும் காளையை ஜல்லிக்கட்டு போட்டியில் அவிழ்த்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறார். இந்தவருடம் நடந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளையை களமிறக்கியபோது அவரது காளை பிடிமாடாக போனது. அப்போது அப்போது விழாக் குழுவினர் யோகதர்ஷினிக்கு சிறப்பு பரிசு வழங்க அழைத்தனர். ஆனால் யோகதர்ஷினி எனது மாடு வெற்றிபெற்றபின் பரிசு வாங்கிக்கொள்கிறேன் என கூறி கெத்தாக நடையை கட்டினார்.

jallikattu

இந்தநிலையில், சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மீனம்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் யோகதர்ஷினி தான் வளர்க்கும் காளையை அவிழ்த்தார். அப்போது அந்த காளையை தெற்குத்தெருவை சேர்ந்த கவியரசன் என்ற மாடுபிடி வீரர் அந்த காளையை அடக்கினார். அப்போது காளைக்கு பின்னே வந்த யோகதர்ஷினி அந்த மாடுபிடி வீரரை அழைத்து கைகுலுக்கி பாராட்டி சென்றார். அச்சச்சோ வீரத்தமிழச்சியின் காளையை அடக்கிவிட்டோமே என எண்ணி அந்த மாடுபிடி வீரர் அங்கேயே கண்ணீர் சிந்தினார். பொதுவாக தனது காளை ஜல்லிக்கட்டில் பிடிபட்டால் மாட்டின் உரிமையாளர்கள் வருத்தப்படுவார்கள். ஆனால் யோகதர்ஷினி தனது காளை பிடிபட்டாலும் அந்த மாடுபிடி வீரரை சிரித்த முகத்துடன் அழைத்து பாராட்டுவது ஒட்டுமொத்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்களையும் நெகிழவைத்துள்ளது.