ஜல்லிக்கட்டு: உலக சாதனை முயற்சியா.. எங்கு தெரியுமா? அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
ஜல்லிக்கட்டு: உலக சாதனை முயற்சியா.. எங்கு தெரியுமா? அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!

விராலிமலையில் ஜல்லிக்கட்டு உலக சாதனை முயற்சியாக நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை வருவதை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு. இந்நிலையில் பொங்கல் வருவதை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்து வருகிறது. ஒவொரு வருடமும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.
2019 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு விழா அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் போன்ற ஜல்லிக்கட்டிற்கு பெயர்போன முக்கிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் தனது சொந்த தொகுதியான புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உலக சாதனை முயற்சியாக இவ்வாண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது: இவ்வாண்டு உலக சாதனை முயற்சியாக ஜனவரி 20 அன்று விராலிமலையில் மிகப்பிரமாண்டமான முறையில் ஜல்லிக்கட்டு விழா நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழாவில் வெற்றி பெறும் காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார்கள், பைக், மிதிவண்டி, பீரோ என விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
மேலும் உலக சாதனையாக மதிப்பிடும் மதிப்பீட்டு குழு லண்டனிலிருந்து வருகை தர இருப்பதாகவும் அவர்களுக்கு வேண்டிய சிறப்பு வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.