குழந்தையை கொஞ்வதுபோல் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்துக்குவீட்டு பெண்.! அடுத்து நடந்த பகீர் சம்பவம்.!

குழந்தையை கொஞ்வதுபோல் வீட்டிற்குள் நுழைந்த பக்கத்துக்குவீட்டு பெண்.! அடுத்து நடந்த பகீர் சம்பவம்.!


women theft jewels in neighbor home

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கிய கில்பர்ட்.  சிப்காட் தொழிற்பேட்டையில் வேலை செய்து வரும் இவர், தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்தநிலையில், கடந்த 17 ஆம் தேதி தனது வீட்டு பீரோவில் வைத்திருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 5 பவுன் தங்க நகை திருடுபோனதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில், ஆரோக்கிய கில்பர்ட் வீட்டின் அருகில் வசிக்கும் கோமதி என்பவர் ஆரோக்கிய கில்பர்ட்டின் குழந்தையை கொஞ்சுவது போல நடித்து பீரோவில் இருந்த நகையை திருடியது தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தையை கொஞ்சுவது போல் நடித்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிய கோமதி மற்றும் நகையை அடகு வைக்க உதவிய சுரேஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட 5 பவுன் தங்க நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.