போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் நிலையை பார்த்தீர்களா! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!!

போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞரின் நிலையை பார்த்தீர்களா! நீதிபதி விடுத்த அதிரடி உத்தரவு!!


women-lawyer-pre-bail-petition-dismissed

சேத்துப்பட்டுபகுதியில் ஊரடங்கு வாகன சோதனையில் போக்குவரத்து காவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தகராறில் ஈடுபட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சென்னை சேத்துபட்டு சிக்னலில் கடந்த வாரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஆனந்தன் மற்றும் தலைமைக் காவலர் ரஜித்குமார் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்தவழியாக வந்த கார் ஒன்றை மறித்து விசாரித்துள்ளனர். அப்போது அந்த காரில் வந்த சட்டக்கல்லூரி மாணவியான ப்ரீத்தி ராஜனுக்கு ஊரடங்கு விதிகளை மீறி வெளியே சுற்றுவதாக அபராதம் விதித்துள்ளனர்.

இந்நிலையில் ப்ரீத்தி ராஜன் அவரது அம்மாவிற்கு போன் செய்து அங்கு வரவைத்துள்ளார். அதனை தொடர்ந்து அங்கு வந்த வழக்கறிஞரான அவரது தாயார் தனுஜா ராஜன் போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மோசமாக பேசியுள்ளார். அவ்வாறு காவல்துறையினரை ஒருமையில் தரக்குறைவாக பேசிய வீடியோ இணையத்தில் வைரலானது. இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் போலீஸார் 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று நீதிபதி செல்வக்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை முழுவதும் விசாரித்த அவர், மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல்துறையினரிடம் இதுபோல நடந்து கொள்ளக்கூடாது. இந்த செயல்பாடு சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுபோன்ற சம்பவத்தில் முன்ஜாமீன் தந்தால் அதுவே தவறான முன்னுதாரணமாக மாறிவிடும் என கூறி முன்ஜாமின் வழங்க  மறுத்து மனுவைத் தள்ளுபடி செய்ய உத்தரவிட்டுள்ளார்.