கழிவு நீரால் கலவரமான குடும்பம்.. உலக்கையால் அடித்து ஒருவர் கொலை!Women killed for drainage water in dindugal

திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை அருகே உள்ள சடையம்பட்டியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம். இவரது மனைவி தமிழரசி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வீட்டிற்கு அருகே கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் தமிழரசி வீட்டிலிருந்து சாக்கடை கழிவுநீர் கருப்பையா வீட்டின் முன்பாக அடிக்கடி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

dindugal

இந்த நிலையில் நேற்று காலையில் அதேபோல் கழிவுநீர் வெளியேறியதால், இரு குடும்பங்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தகராறு முற்றியதில் கருப்பையா உலக்கையை எடுத்து வந்து தமிழரசி தலையில் பலமாக தாக்கியுள்ளார்.

இதில், பலத்த காயமடைந்த தமிழரசி உடனடியாக வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

dindugal

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த கொலையாளி கருப்பையாவை தீவிரமாக தேடி வந்த நிலையில், மதுரையில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.