இதுக்கு பதிலா அதை ஊற்றியதால் பற்றிய தீ: பரிதாபமாக உயிரிழந்த பெண்..!

இதுக்கு பதிலா அதை ஊற்றியதால் பற்றிய தீ: பரிதாபமாக உயிரிழந்த பெண்..!


women died due to fire accident when she torch stove

கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் குடியிருப்பு காலனியை சேர்ந்தவர் சங்கர். இவர் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி வனஜா (46). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

சம்பவத்தன்று சங்கர் வழக்கம் போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். வனஜா சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த ஸ்டவ் அடுப்பில் மண்ணெண்ணைக்கு பதிலாக டீசல் ஊற்றி அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீப்பற்றி உடல் முழுவதும் தீ பரவியுள்ளது.

இதனால் வனஜா அலறியுள்ளார். இதற்கிடையே தனது வேலை முடிந்து வந்த சங்கர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வனஜா மீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அவர் பலத்த தீக்காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து, வனஜாவை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

வனஜாவுக்கு தீக்காயம் அதிகமாக இருந்ததால் அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று வனஜா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தீ விபத்து குறித்து போத்தனுர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.