விபத்தில் சிக்கிய கணவன்! பார்க்க சென்ற மனைவிக்கு நடுவழியில் காத்திருந்த அதிர்ச்சி



Women dead in accident who went to meet her husband

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கணவனை பார்க்க சென்ற மனைவி விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐசிஎப்- இல் இருந்து கீழ்பாக்கம் நோக்கி பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த மாநகர பேருந்து அந்த பெண் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியதில், நிலைதடுமாறி கீழே விழுந்த அந்த பெண், தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி ப்ரேதே பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இறந்த பெண்ணிடம் இருந்த ஆவணங்களை வைத்து போலீசார் விசாரித்ததில் அந்த பெண் சென்னை ஐசிஎப் பகுதியை சேர்ந்தவர் என்பதும், விபத்தில் சிக்கி கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் தனது கணவரை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பயணித்ததும் தெரியவந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தனது கணவரை பார்க்க சென்ற பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.