திருச்சியில் சோகம்: மகள் பிரசவத்திற்கு சென்ற தாய் பரிதாப பலி.!! காவல்துறை தீவிர விசாரணை.!!woman-who-went-to-takecare-of-her-pregnant-daughter-was

திருச்சியில் மகள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவரைப் பார்க்கச் சென்று தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம்  அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது  திருச்சி அருகே உள்ள கொட்டப்பட்டு இலங்கை முகாமை சேர்ந்தவர் மகேஸ்வரன் இவரது மனைவி துளசி தேவி(40).

tamilnaduஇவர்களது மகள் பிரசவத்திற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் தனது மகளை பார்த்துக் கொள்வதற்காக துளசி தேவி அரசு மருத்துவமனைக்கு சென்று இருக்கிறார். துளசி தேவி இரத்த அழுத்த நோயால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனது மகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையின் மகளிர் பிரிவு வார்டில் இருந்த துளசி தேவி திடீரென மயங்கி விழுந்தார்.

tamilnaduஇதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த துளசி தேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரசவ காலத்தில் மகளுக்கு துணையாக இருக்க வந்த தாய் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.