காதல் மனைவி கொடூர கொலை... 17 இடங்களில் கத்திக்குத்து... கணவன் வெறிச்செயல்.!

காதல் மனைவி கொடூர கொலை... 17 இடங்களில் கத்திக்குத்து... கணவன் வெறிச்செயல்.!


woman-murdered-brutally-stab-wounds-on-17-places-husban

பொள்ளாச்சி அருகே காதல் மனைவி கத்தியால் குத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி புது காலனியைச் சேர்ந்தவர் 34 வயதான டேவிட் என்ற ஆறுமுகம். இவரும் கற்பகம் என்ற பெண்ணும் காதலித்து கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆறுமுகம் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.

tamilnaduஇந்நிலையில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கற்பகம் மற்றும் ஆறுமுகம் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தனர். ஆறுமுகம் தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர் தொப்பம்பட்டியில் வேலைக்கு சென்ற போது தனது மனைவியின் வீட்டிற்கு சென்று இருக்கிறார். மேலும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என மனைவியை வற்புறுத்தியதாக தெரிகிறது. இதற்கு அவரது மனைவி சம்மதிக்கவில்லை.

tamilnaduஇதனைத் தொடர்ந்து நேற்று இரவு தனது மனைவியின் வீட்டிற்கு சென்ற ஆறுமுகம் அவரை தன்னுடன் சேர்ந்து வாழுமாறு வற்புறுத்தி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியிருக்கிறது. இதில் ஆத்திரம் அடைந்த ஆறுமுகம் கத்தியால் தனது மனைவியின் உடலில் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் 17 முறை குத்தி கொடூரமாக கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கற்பகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.