ரயிலின் கழிவறைக்கு சென்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்.

ரயிலின் கழிவறைக்கு சென்ற ஊழியர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஓடும் ரயிலில் நடந்த சம்பவம்.


Woman delivers baby girl in the toilet of a moving train

பீகார் மாநிலம் சாப்ரா என்னும் பகுதியை சேர்ந்தவர் பிங்கி தேவி. 25 வயதான பிங்கி தேவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் பீகாரில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை வரும் கங்கா-காவிரி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார் பிங்கி தேவி.

ரயில் வரும் வழியில் விடியற்காலை நேரத்தில் கழிவறைக்கு தனியாக சென்றுள்ளார் பிங்கி தேவி. அங்கு அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் வலி தாங்க முடியாமல் பிங்கி தேவி அலறியுள்ளார். ஆனால், ரயிலின் சத்தம், விடியற்காலை என்பதால் பயணிகளின் ஆழ்ந்த தூக்கத்தால் பிங்கி தேவியின் அலறல் சத்தம் யாருக்கும் கேட்கவில்லை.

myths

ஒருகட்டத்தில், வலி தாங்க முடியாமல் பிங்கி தேவி ரயிலின் கழிவறையிலையே அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துளார். தாயும், குழந்தையும் ரயிலின் கழிவறையிலையே இருந்த நிலையில் ரயில்வே ஊழியர்கள் கழிவறையை சுத்தம் செய்ய அங்கு சென்றுள்ளனர்.

கழிவறையில் பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து மற்றவர்களுக்கு தகவல் கொடுக்க, அடுத்த ரயில் நிலையத்தில் ஆம்புலன்ஸ் வரவைக்கப்பட்டு தாயையும், அந்த குழந்தையையும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தற்போது அந்த பெண்ணும், குழந்தையும் நலமுடன் இருப்பதாக செய்துள் வெளியாகியுள்ளது.