கணவரின் கள்ளக்காதலிக்கு பிறந்த பெண்குழந்தையை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை..கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!

கணவரின் கள்ளக்காதலிக்கு பிறந்த பெண்குழந்தையை கொலை செய்த மனைவிக்கு ஆயுள் தண்டனை..கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு..!


woman-convicted-for-murdering-husband-girlfriends-daugh

கணவனின் கள்ளக் காதலிக்கு பிறந்த மகளை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது. 

ஈரோடு மாவட்டம் கருமாண்டி செல்லி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகநாதன். இவரது மனைவி கனகா, இவர்களுக்கு வினோ எழுகின்ற மகனும் கனி என்கின்ற மகளும் உள்ளனர். இவர்களது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி வனிதா. வனிதாவும் கனகாவும் நெருங்கிய தோழிகள் ஆனால் கனகாவுக்கும் வனிதாவின் கணவர் கமலக்கண்ணனுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது இருவருக்கும் இடையே கள்ள உறவாக மாறி இருக்கிறது.

இதனால் கமலக்கண்ணன் கனகாவின் மகள் கனிக்கு அதிக செல்லம் கொடுத்து வந்திருக்கிறார். படிப்பு செலவு துணி வாங்கி கொடுப்பது என அனைத்து செல்வங்களையும் கமலக்கண்ணன் செய்து வந்திருக்கிறார். இது வனிதாவுக்கு பிடிக்காமல் போகவே வனிதா கணவரை கண்டித்திருக்கிறார். ஆனால் தான் சம்பாதிக்கும் பணத்தை கனிக்கு தான் செலவு செய்வேன் என்று கமலக்கண்ணன் உறுதியாக கூறி இருக்கிறார். 

தான் இவ்வளவு சொல்லியும் கணவர் கேட்காதது வனிதாவுக்கு ஆத்திரம் வந்துள்ளது. அந்த கோபம் முழுவதுமாக கனி மேல் திரும்பியிருக்கிறது. கனி இருந்தால்தானே அவர் சம்பாதிக்கும் பணத்தை அவளுக்கு செலவு செய்வார். அவளை கொன்று விட்டால் எப்படி செலவு செய்வார் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார் வனிதா.

2018 ஆம் ஆண்டில் மே மாதம் 2ஆம் தேதியன்று சண்முகநாதன் திருப்பூருக்கு வேலைக்கு சென்று இருக்கிறார், அவரது மனைவி கனகாவும் தனியார் மில்லுக்கு வேலைக்கு சென்று இருக்கிறார், அவரது மகன் வினுவும் பாட்டி வீட்டுக்கு சென்றிருக்கிறான், சிறுமி மட்டும் வீட்டில் தனியாக உள்ள நிலையில் இது தான் சரியான சந்தர்ப்பம் என்று நினைத்த வனிதா கனியை தன் வீட்டுக்கு விளையாட அழைத்து வந்து அந்த சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறார்.பின்னர் உடலை தூக்கி சென்று வீட்டிற்கு பின்புறம் உள்ள காலி இடத்தில் வீசிவிட்டு கீழே தவறி விழுந்து கனி இறந்து விட்டதாக நாடகமாடி இருக்கிறார். 

ஆனால் காவல்துறையின் விசாரணையில் உண்மைகள் வெளிவந்துள்ளன. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணைகள் முடிவடைந்ததை அடுத்து வனிதாவிற்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி ஆர். மாலதி தீர்ப்பளித்துள்ளார்.