தமிழகம் காதல் – உறவுகள்

நடுரோட்டில் தனது கணவரை சரமாரியாக வெளுத்துக்கட்டிய இருமனைவிகள்.! காரணத்தை கேட்டு தலைசுற்றிப்போன போலீசார்!!

Summary:

wives attacked husband on road

சூலூர் அருகே நேரு நகரில் வசித்து வருபவர் சவுந்தர்ராஜ். இவரது மகன் அரங்க அரவிந்த தினேஷ். 26 வயது நிறைந்த இவர் ராசிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அரவிந்த் தினேஷ் 2016ம் ஆண்டு அரவிந்த தினேஷ்க்கும் , பிரியதர்ஷினி என்பவருக்கும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. ஆனால்  திருமணம் ஆன 15 நாட்களிலேயே அரவிந்த் தினேஷ் அவரது மனைவியை அடித்து உதைத்து கொடுமைபடுத்தியுள்ளார். மேலும் இது குறித்து தெரிந்த போதும் அவரது மாமனார், மாமியார் எதுவும் சொல்லாமல் இருந்துள்ளனர்.

முதல் மனைவி பிரியதர்ஷினியுடன் அரங்க அரவிந்த தினேஷ்

 இதனைத் தொடர்ந்து இதுகுறித்து போலீசாரிடம் புகார் அளித்து விட்டு பிரியதர்சினி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் தனக்கு திருமணமானதை மறைத்து அரவிந்த் தினேஷ் திருமண வலைதளம் மூலம் தனது இரண்டாவது திருமணத்திற்கு பெண் தேடியுள்ளார். அதனை தொடர்ந்து கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.சில மாதங்கள் கடந்த நிலையில் அனுப்ரியாவையும்  அரவிந்த தினேஷ் கொடுமைப்படுத்த துவங்கியுள்ளார்.

இதனால் மனவேதனை அடைந்த அனுப்பிரியா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்நிலையில் இரண்டாவது மனைவியும் அவரை விட்டு பிரிந்து சென்ற நிலையில் அவர் மீண்டும் மூன்றாவதாக திருமணம் செய்து கொள்ள பெண் தேடியுள்ளார். இதனை தெரிந்துகொண்ட இரு மனைவிகளின் குடும்பத்தினரும் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். அதற்கு நான் இப்படி தான் செய்வேன் என அரவிந்த தினேஷ் திமிராக பேசியுள்ளார். 

இரண்டாவது மனைவி அனுப்பிரியாயுடன் அரங்க அரவிந்த தினேஷ்

இந்நிலையில் அரவிந்த் தினேஷ் இரு மனைவியும், அவர் வேலை பார்க்கும் தொழிற்சாலைக்கு சென்று அவரை வெளியே அனுப்ப கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் அதற்கு அனுப்ப மறுத்த நிலையில் இருவரும் கம்பெனி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் அரவிந்த் தினேஷ் மற்றும் அவரது இரு மனைவியரையும் காவல் நிலையத்திற்கு வரக்கூறி உள்ளனர்.

இந்நிலையில் காவல் நிலையத்திற்கு செல்வதற்காக கம்பெனியை விட்டு வெளியே வந்த அரவிந்த் தினேஷை அவரோடு இருமனைவிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த போலீசார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரு மனைவியரும் கொடுத்த புகாரின் அடிப்படையில்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


Advertisement