தமிழகம்

தள்ளாடும் வயதிலும், தமிழகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த கமலா பாட்டி.! போட்டிபோட்டு கொண்டு அடிக்கும் அதிர்ஷ்டம்!!

Summary:

wishes for one rupee idly sale kamalammaal

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் பகுதிக்கு அருகேயுள்ள வடிவேலாம்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் கமலா பாட்டி . 85 வயது நிறைந்த இவர் கடந்த 30 ஆண்டுகளாக இட்லி சுட்டு விற்பனை செய்து வருகிறார். மேலும் ஆட்டுக்கல்லில் மாவு அரைத்து விறகு அடுப்பில் அவர் செய்யும் இட்லிக்கும், அம்மிக்கல்லில் அவரே அரைக்கும் சட்னிக்கு, மேலும் அவரே உருவாக்கிய நறுமணமான மசாலாவால் செய்த சாம்பாருக்கும் அடிமையாக ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

மேலும் குழந்தைகள், பெரியவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பள்ளி மாணவர்கள், நோயாளிகள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கமலா பாட்டியின் இட்லியின் விலை ஒரு ரூபாய் மட்டுமே.

இவ்வாறு 85 வயதிலும் லாபத்தை பார்க்காமல் பம்பரமாய் சுழன்று  பலரின் பசியாற்றிவரும் கமலா பாட்டி குறித்த தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும்  பலரும் தாமாக முன்வந்து அவருக்கு வேண்டிய உதவிகளை செய்ய தயாராக உள்ளனர்.

Image result for கமலா பாட்டி

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி கமலா பாட்டியை தன்னுடைய அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் அவருக்கு சில பரிசு பொருட்களை வழங்கிய அவர் உங்களுக்கு என்ன வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு கமலா பாடி எதுவும் வேண்டாம் என கூறியுள்ளார். இருப்பினும் பாரதப் பிரதமரின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளார்.

மேலும் பாட்டியின் சேவையை பாராட்டி மகேந்திரா அன்ட் மகேந்திரா நிறுவனம் கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் கியாஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது.

  


Advertisement