அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
கணவன் மீது சூடான எண்ணெயை ஊற்றி விட்டு மனைவி தற்கொலை முயற்சி!
உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெயை ஊற்றிவிட்டு மனைவி தற்கொலை செய்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பால் மணி. விவசாய கூலி தொழிலாளியான இவருக்கு பவுனாம்பாள் என்ற மனைவியுள்ளார். இவர்கள் இருவரும் விவசாயம் செய்தும், கூலி வேலை செய்தும் வந்துள்ளனர்.

இதனிடையே கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதன்படி வழக்கம்போல் இருவருக்கும் இடையே நேற்று ஏற்பட்ட தகராறு மனைவி பவுனாம்பாள் கணவன் மீது சூடான எண்ணெயை போற்றி விட்டு தானும் கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.
இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து பவுனாம்பாளை காப்பாற்றினர்.

மேலும், சூடான எண்ணெய் ஊற்றியதில் படுகாயம் அடைந்த பால்மணியையும் மீட்டு சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.