தமிழகம்

கணவனை பழிவாங்க, நண்பனுடன் சேர்ந்து பேஸ்புக்கில் ஆபாச படங்களை பதிவிட்ட மனைவி! வெளியான அதிர்ச்சி தகவல்!

Summary:

wife shares husband morphing photo

திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் ஜெய்கணேஷ், இவர் திருச்சியில் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் ஜெய்கணேஷுக்கும் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தாட்சாயினிக்கும் 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், தாட்சாயினி கணவரை பிரிந்து பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். கணவனை பிரிந்து மயிலாடுதுறையில் பெற்றோருடன் வசித்துவந்தாலும், இந்த தம்பதியினர் அடிக்கடி செல்போனில் சண்டை போட்டு வந்துள்ளனர். பேராசிரியர் ஜெய்கணேஷ் தன் வாழ்க்கையில் நடக்கும் அத்தனை சம்பவங்களையும் முகநூலில் எழுதுவதை வழக்கமாக கொண்டவர். 

பிரிந்த மனைவியுடன் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசையில் திருமணத்தின்போது எடுத்த புகைப்படங்களை முகநூலில் பதிவு செய்துள்ளார். அவரது முகநூல் பதிவை பார்த்து கோபமடைந்த மனைவி தாட்சாயினி அந்தப் படங்களை நீக்குமாறு கூறியுள்ளார். ஆனால் மோகன் ஜெய்கணேஷ், தற்போது வரை நீ என் மனைவிதான், அதனால் உன்னுடன் இருக்கும் படத்தை எனது முகநூலில் பதிவு செய்வதில் என்ன பிரச்னை என்று கேட்டு, படத்தை நீக்காமல் இருந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த, தாட்சாயினி தனது புகைப்படத்தை பதிவிடும் அதே முகநூலில், தனது கணவரை அசிங்கப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்து, தனது கல்லூரி கால நண்பரான கட்டுமான தொழில் செய்யும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சேர்ந்த 28 வயதான கிருபாகரன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து இருவரும் திட்டமிட்டு ஜெய்கணேசின் முகநூல் பக்கத்தில் ஆபாச படங்களை பதிவிட முடிவு செய்துள்ளனர். தனது கணவனின் முகநூல் பாஸ்வேர்டு, தாட்சாயினிக்கும் தெரிந்துள்ளது. இதனையடுத்து முகநூலில் ஜெய்கணேஷ் பதிவிட்டது போல சில பெண்களின் ஆபாசப் படங்களை மார்பிங் செய்து பதிவேற்றியுள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜெய்கணேஷ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். விசாரணையில், தாட்சாயினியும், கிருபாகரனும் திட்டமிட்டு ஆபாச மார்பிங் புகைப்படங்களை பதிவேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து 5 பிரிவுகளின் கீழ் பொலிசர் வழக்குப்பதிவு செய்து, கிருபாகரனை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தாட்சாயினியை தேடி வருகின்றனர்.


Advertisement