தமிழகம்

தனது கணவனை கொன்றவர்களை தீர்த்துகட்ட, மனைவி போட்ட கொடூர ஸ்கெட்ச்! அதிர வைக்கும் பகீர் சம்பவம்!

Summary:

Wife plannd and killed persion who murdered her nusband

மதுரை கரும்பாலை பகுதியை சேர்ந்தவர்  முருகன். டவுடியான இவர் விபத்தில் சிக்கி, எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 5ம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முருகனை அங்கு  ஆயுதங்களுடன் வந்த மர்மகும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளது. இதனைக் கண்ட மருத்துவர்கள் மற்றும் நர்சுகள் அனைவரும் அச்சத்தில் அலறியடித்து ஓடியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் ஒரு பெண்ணின் தூண்டுதலிலேயே இந்த கொலை நடந்தது கண்டறியப்பட்டது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வைகையாற்றின் மைய மண்டப பகுதியில் கஞ்சா வியாபாரி பட்டா ராஜேந்திரன் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் சந்துரு மற்றும் கரும்பாலை முருகன் இருவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் தனது கணவரைக் கொன்றவர்களை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்பதற்காக பட்டா ராஜேந்திரனின் மனைவி  ராஜேஸ்வரியே பிளான் போட்டு முருகனை கொலைசெய்ய தூண்டியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

மேலும் ராஜேஷ்வரி இதற்கு முன்னரே முதல் குற்றவாளியான சந்துருவை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement