தமிழகம்

தாலி கட்டுன புருஷன்னுகூட பார்க்கல!! நள்ளிரவில் மனைவி செய்த காரியம்!! பதறிப்போன போலீசார்!!

Summary:

கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கணவனை மனைவி வெட்டி கொலை செய்த சம்பவம் காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் - நஷிரியா தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நவ்ஷாத் அந்த பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக வேலைபார்த்துவந்துள்ளார். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையான நவ்ஷாத் அவ்வப்போது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்துவந்துள்ளார்.

வழக்கம்போல் கடந்த வியாழக்கிழமை அன்று இரவும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த நவ்ஷாத் கறி வெட்டும் கத்தியை எடுத்து நஷிரியாவை கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். ஏற்கனவே கணவன் மீது கடும் கோவத்தில் இருந்த நஷிரியா, கணவனிடம் இருந்து கத்தியை பறித்து, அதே கத்தியால் கணவனை வெட்டி கொலை செய்துள்ளார்.

இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலையே உயிரிழக்க, காவல்நிலையத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை கூறி சரணடைந்துள்ளார் நஷிரியா. இதனை கேட்டு பதறிப்போன போலீசார், உடனே சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று நவ்ஷாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நஷிரியாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.


Advertisement