கள்ளக்காதலை கண்டித்த கணவனுக்கு மனைவியால் நேர்ந்த கொடூர சம்பவம்!Wife killed husband for illegal relationship

புதுச்சேரியில் கள்ளக்காதலை கண்டித்த கணவனை, மனைவியே கொன்றுவிட்டு நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி கோரிமேடு ஞானப்பிரகாசம் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர்‌ - ஷர்மிளா தம்பதியினர். இதில் பாஸ்கர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில், ஷர்மிளா பல ஆண்களுடன் தகாத உறவு வைத்து வந்துள்ளார்.

puducherry

இதனையறிந்த பாஸ்கர், ஷர்மிளாவை கண்டித்துள்ளார். ஆனால், இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஷர்மிளா பல ஆண்களுடன் தனது கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஷர்மிளா தனது கணவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதனிடையே வெளியான பாஸ்கரின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பாஸ்கர் கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு தெரிய வந்தது.

puducherry

இதனையடுத்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் தனது கணவரை கொலை செய்ததை ஷர்மிளா ஒப்புக் கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து ஷர்மிளாவை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.