கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய, கணவனை கூலிப்படை ஏவி கதைமுடித்த மனைவி..!

கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய, கணவனை கூலிப்படை ஏவி கதைமுடித்த மனைவி..!


wife-killed-his-husband-for-illegal-relationship

கள்ளக்காதலனுடன் திருமணம் செய்வதற்கு தடையாக இருந்த கணவனை, கூலிப்படை ஏவி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் அருகாமையில் தண்ணீர்பந்தல் பகுதியில் வசித்து வருபவர்கள் கோபால்-சுசீலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சின்னக்கரையில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் கோபால் வேலை செய்து வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 4ஆம் தேதி வேலை முடிந்து இரு சக்கர வாகனத்தில் கோபால் வீடு திரும்பியபோது, வழியில் தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது திடீரென அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று 13 இடங்களில் கோபாலை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளது.

இதில் பலத்த காயமடைந்த கோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின் இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து கோபாலின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

tripur

இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்திய நிலையில், பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்த சுசீலாவுக்கு, அவருடன் பணியாற்றிய மாரீஸ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளது. 

இதனால் இருவரும் திருமணம் செய்வதற்கு கோபால் தடையாக இருந்ததால், கூலிப்படையை ஏவி மனைவியே கணவனை கொலை செய்த சம்பவம் தெரியவந்துள்ளது. காவல் துறையினர் மாரீஸ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த நிலையில், தலைமறைவாகியுள்ள சுசீலாவை வலைவீசி தேடி வருகின்றனர்.