தமிழகம்

குத்துவிளக்கில் கணவனின் குடலை பதம்பார்த்த மனைவி.. நடந்த பரபரப்பு சம்பவம்‌‌.. பறிபோன உயிர்..!

Summary:

குத்துவிளக்கில் கணவனின் குடலை பதம்பார்த்த மனைவி.. நடந்த பரபரப்பு சம்பவம்‌‌.. பறிபோன உயிர்..!

கணவரை குத்துவிளக்கில் தாக்கி மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் அடுத்த சிவத்தையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பொன்ராஜ். இவரின் மனைவி சந்திரமதி. இந்த தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

தம்பதியர் இருவருக்கும் குடும்ப பிரச்சினை காரணமாக அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டது போல செயல்பட்டு வந்த நிலையில், சந்திரமதி கணவரை அடித்து துன்புறுத்துவதாக வந்ததாகவும் தெரியவருகிறது. 

தனது வீட்டு வாசலில் சம்பவத்தன்று கணவரை குத்துவிளக்கில் தாக்கியதில் படுகாயமடைந்த கணவர் தூத்துக்குடி அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக வழக்கு செய்த காவல்துறையினர் சந்திரமதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement