தமிழகம்

கணவன் இறந்த அடுத்த நொடியே உயிரைவிட்ட மனைவி.! சோக சம்பவம்.!

Summary:

கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக

கோவை மாவட்டம் குளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்ற ராமமூர்த்தியின் மனைவி சரோஜினி. இவர்களின் மகன் சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்துள்ளார். குளத்துப்பாளையம் பகுதியில் உள்ள வீட்டில் ராமமூர்த்தியும் சரோஜினியும் வசித்து வந்துள்ளனர்.

 இந்தநிலையில், உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை ராமமூர்த்தி உயிரிழந்தார். கணவர் இறந்த அதிர்ச்சியில் அவரது மனைவி சரோஜினி கதறி அழுது மயங்கி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சரோஜினி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

கணவன் இறந்த சில மணி நேரத்திலேயே மனைவியும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அப்பகுதி மக்கள் அவர்களது பாசப்பிணைப்பை பார்த்து வியந்து போனார்கள். சற்றுமுன் அவர்களது உடல்கள் தகனம் செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement