தமிழகம்

கணவனை இழந்து, தனியாக வாழ்ந்த பெண்! உறவினர் கூறிய ஒத்த வார்த்தையால், மொத்தமும் இழந்து தவிக்கும் பரிதாபம்!

Summary:

widow women cheated by relative

ஹரியானா மாநிலம் குருஷேத்திரா கௌலாப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரேகா ராணி என்ற சீமா ராணி. இவரது கணவர் சுஜித்குமார் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சீமா ராணி யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீமாவின் வங்கி கணக்கில் பணம் இருப்பதை அறிந்து கொண்ட அவரது உறவினரான சிஷ்பால் என்பவர் சீமாவிடம் உனது வங்கி கணக்கில் உள்ள 7 லட்சம் ரூபாயை எடுத்து என்னிடம் கொடு, நான் அதனை என் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி உனக்கு கொடுக்கிறேன்  எனக் கூறியுள்ளார். 

india money க்கான பட முடிவு

இதனைக் கேட்டு ஆசையில் மூழ்கிய சீமா உடனே அவரை நம்பி தனது பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சிஷ்பால் சீமாவை ஏமாற்றி பணத்தை சுருட்டி சென்றுவிட்டார். இந்நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த சீமா இதுகுறித்து நேற்று குருசேத்திரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் சிஷ்பால் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


 


Advertisement