திரும்பி பாக்கலாம் வாங்க!! நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதன் பின்னணி என்ன?

திரும்பி பாக்கலாம் வாங்க!! நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியதன் பின்னணி என்ன?



why-veerapan-kidnapped-rajkumar

15 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் தனிக்காட்டு ராஜாவாக வாழ்ந்து வந்தவர் தான் வீரப்பன். இவருடைய அச்சுறுத்தலுக்கு என்றுமே பயந்து நடுங்கியது கர்நாடகா. 

சந்தன கட்டைகளை வெட்டி விற்பதை முக்கிய வேலையாக கொண்டிருந்த வீரப்பன் சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தனது குழுவுடன் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். இவர் தமக்கு கிடைத்த வருமானத்தை ஏழை மக்களுக்கு தம்மால் இயன்ற உதவிகளை செய்து வந்தார் என்பது பரவலாக அறியப்பட்ட உண்மை. இவருடன் பல்வேறு அரசியல் தலைவர்கள் இருக்கும் மறைமுகமாக உறவு இருந்தது என்பது பலரின் சந்தேகமாக இருந்து வருகிறது.

why veerapan kidnapped rajkumar

2000ஆம் ஆண்டு வீரப்பன் பல இன்னல்களை சந்தித்தார். இதிலிருந்து விடுபட அவர் போட்ட திட்டம்தான் கர்நாடக நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம். இதனை தனது சுயநலத்திற்காக மட்டுமல்லாமல் தமிழக மக்களின் நலனுக்காகவும் செய்தார். 

ஜூலை 31, 2000. அந்த நாள் தமிழக - கர்நாடக மாநில எல்லை பெரும் பதற்றமான சூழலோடு விடிந்தது. ஈரோடு வந்திருந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அதற்கு முந்தைய நாளான, ஜூலை 30 அன்றின் இரவில், தொட்டகாஜனூரில் இருந்த அவரது பண்ணை வீட்டிலிருந்து வீரப்பனால் கடத்தப்பட்டார். 

இன்று போலவே அன்றைக்கும் தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே காவிரி நீர் பங்கீடு பிரச்சினை இருந்து வந்தது. இந்த பிரச்சினையை தீர்க்க வேண்டியும் தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்பதுதான் இந்த கடத்தல் சம்பவத்தில் முக்கிய கோரிக்கையாக வீரப்பன் முன்னிறுத்தினார்.

why veerapan kidnapped rajkumar

மேலும் இரு மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளிகளின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டியும் கோரிக்கை விடுத்தார். மைசூர் சிறையில் `தடா' சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவரது கூட்டாளிகளின் விடுதலை, தமிழக சிறையில் இருந்த அவரது கூட்டாளிகள் ஐவர் விடுதலை, பழங்குடியினர் மீது சிறப்பு ஆயுதப் படையினர் நிகழ்த்திய தாக்குதலை விசாரித்து வந்த சதாசிவம் ஆணையம் மீதான நீதிமன்றத் தடையை நீக்கக் கோரிக்கை முதலானவற்றைத் தனது கோரிக்கைகளாக தமிழம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு முன்னிறுத்தினார்.

`தடா' வழக்கின் கீழ் கைதுசெய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்க கர்நாடக அரசு முடிவெடுத்த போதும், உச்ச நீதிமன்றம் விடுதலை மீது தடை விதித்தது. இரு மாநில அரசுகளின் சார்பில், வீரப்பன் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்த பழ. நெடுமாறன், மனித உரிமைப் போராளிகள் பேராசிரியர் கல்விமணி, புதுவை சுகுமாரன் ஆகியோர் அனுப்பப்பட்டனர். 

why veerapan kidnapped rajkumar

இந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முதலில் நடிகர் ராஜ்குமாரின் உறவினர் கோவிந்தராஜ் விடுவிக்கப்பட்டார்.  கடத்தப்பட்டு, 108 நாள்கள் கழித்து, 2000ம் ஆண்டு நவம்பர் 30 அன்று நடிகர் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார்.