வட மாநிலங்களில் திறக்கப்பட்ட பள்ளிகள்.! தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படுகிறது.? அமைச்சர் செங்கோட்டையன் பதில்!



when will open school in tamilnadu

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். 

கொரோனா அச்சுறுத்தலால் பள்ளி, கல்லூரிகள் ஆறு மாதத்துக்கும் மேலாக மூடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் பேரில் பள்ளிக்கு வரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வருகை தந்து பாடங்களை படித்துச் செல்கின்றனர்.

school

இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டயன், தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பது சாத்தியமில்லை , ஆன்லைன் வகுப்புக்கு விடுமுறை விடப்பட்டதை மீறி தனியார் பள்ளிகள் வகுப்புகளை நடத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.