மற்ற வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் திறக்கப்படுகிறது.? அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!When do schools open in Tamil Nadu?

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் பள்ளிகள் நீண்ட நாட்களாக திறக்கப்படாமல் இருந்து வந்ததால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் தற்போது கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்திருப்பதால் சமீபத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் தொடங்கப்பட்டது. மற்ற வகுப்புகளுக்கு எப்போது பள்ளிகள் தொடங்கப்படும் என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் இருந்துவந்தது.

school open

இந்தநிலையில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஓடையாகவுண்டன்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மற்ற வகுப்புகளுக்குப் பள்ளிகளைத் திறப்பது குறித்து முதல்வர்தான் முடிவு செய்வார் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.