தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.? அரசின் முடிவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.!

தமிழ்நாட்டில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்.? அரசின் முடிவை வெளியிட்ட அமைச்சர் செங்கோட்டையன்.!


when-are-the-schools-opening-in-tamil-nadu-minister-sengottaiyan-has-responded

தமிழ் நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமானதை அடுத்து கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையறையின்றி விடுப்பு அறிவிக்கப்பட்டது. தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். 

இந்த ஆன்லைன் வகுப்பின் மூலம் அனைத்துத்தரப்பு மாணவர்களும் பயன்பெற முடியவில்லை. வீட்டிற்குள்ளேயே ஐந்து மாதங்களாக அடைபட்டிருக்கும் மாணவர்கள் மொபைல், கணினி திரை வழியே பாடங்கள் பயில்வது உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

school

இந்நிலையில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி அமைச்சர் செங்கோட்டையனை நோக்கி எழுந்தது. நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது அதற்கு பதிலளிக்கும் விதமாக 
கொரோனா வைரஸ் பாதிப்பு குறையும் வரை பள்ளிகளைத் திறக்க வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டாமாக கூறினார். மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடரும் என்று கூறினார்.