தமிழகம் இந்தியா

அபிராமியின் வீட்டின் எதிரே இருக்கும் கடைக்காரர் அபிராமி பற்றி கூறியது என்ன தெரியுமா? கண் கலங்கவைக்கும் வாக்குமூலம்!

Summary:

What neighbors says about kuntrathur abirami

கள்ளக்காதல் காரணமாக பெற்றத்தாயே தன் பிள்ளைகளை பாலில் விஷம் ஊற்றி கொன்ற சம்பவம் அனைவரும் அதிர்ச்சியடையவைத்தது. இந்நிலையில் அபிராமி பற்றியும் அவரது பிள்ளைகள் பற்றியும் அபிராமி வசித்த வீட்டின் அக்கம் பக்கத்தினர் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் வாங்க.


பெண் ஒருவர் கூறுகையில், அபிராமி எப்பவும் இப்படி தான் மேக்கப் போடுவது, உடைக்கு முக்கியத்துவம் தருவது எப்போது பாத்தாலும் வண்டியில் ஊர் சுற்றுவது இதுவே அவரது பொழப்பு. அவரது நடவடிக்கை பிடிக்காத நாங்கள் அவருடன் பழகுவதுகூட கிடையாது என்று தெரிவித்துள்ளார்.


அவரது பசங்கள் இரண்டு பேரும் மிகவும் அழகு மேலும் அதிகம் சமத்து. இவள் அவர்கள் இருவரையும் சரியாக கூட கவனிப்பதில்லை. குழந்தைகள் எப்போதும் வீட்டின் ஓனர் வீட்டில்தான் அதிகம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

அபிராமியின் வீட்டின் எதிர்புறம் இருக்கும் கடைக்காரர் கூறுகையில் அந்த பய்யன் மிகவும் சமத்து அடிக்கடி எனது கடைக்கு வருவான். முதல் நாள் இரவு அந்த பையனுக்கு பாலில் விஷம் வைத்து கொள்ள முயற்சி செய்துள்ளார் ஆனால் அந்த பய்யன் தப்பித்துவிட்டான். அப்போதாவது அவனை விட்டிருக்கலாம்.

ஆனா அடுத்த நாள் காலைல அந்த பையன் கையாலே பால் வாங்கிட்டு வரசொல்லிட்டு அந்த பால்ல மறுபடியும் வேஷத்த கலந்து கொடுத்திருக்கா. அப்போகூட அந்த பையன் பால குடிச்சிட்டு இந்த பொம்பளைக்கு ஆசையா முத்தம் கொடுத்திருக்கான். அந்த பையன கொள்ள எப்படி தான் இவளுக்கு மனசு வந்துச்சோ என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார் அந்த கடை உரிமையாளர்.


Advertisement