குளியலறையில் வெப் கேமரா வைத்த வாலிபர்.! குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!

குளியலறையில் வெப் கேமரா வைத்த வாலிபர்.! குடும்பத்தினருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!


web-cam-in-pathroom

தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியைச் சேர்ந்த ஒருவரது வீட்டின் குளியலறையின் மேல ஏதோ சிவப்பு நிறத்தில் மின்னுவது போல் இருப்பதை பார்த்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். உடனடியாக குளியலறை சென்று பார்த்த போது, அங்கு வெப் கேமரா சார்ஜ் இறங்காமல் இருப்பதற்காக பவர்பேங்க் உடன் இணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த நபர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் நசீர்அகமது(35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

web cam

நசீர் அகமது, புகார் அளித்தவரின் வீட்டின் பின்புறம் உள்ள குளியலறை கண்ணாடியை கழற்றி, குளியலறையின் மேல் வெப்கேமராவை பொருத்தி அங்கு குளிக்கும் பெண்களை பார்த்துள்ளார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.