Weather Update: ஈரோட்டை வாட்டி வதைத்த வெயில்.. வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அதிரடி அறிவிப்பு இதோ..!

Weather Update: ஈரோட்டை வாட்டி வதைத்த வெயில்.. வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய அதிரடி அறிவிப்பு இதோ..!



weather-update-chennai-rmc-announcement-4-march-2023

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அடுத்து ஐந்து தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், "கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக 4-ம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையில் தென் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

Rain alert

7-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையில் தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம். 

Rain alert

அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 22 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரையில் வறண்ட வானிலையே நிலவியது. அதிகபட்சமாக ஈரோட்டில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது" என கூறப்பட்டுள்ளது.