ஏரியை ஆக்கிரமித்து கட்டிய சுற்றுச்சுவர்..! பரிதாபமாக உயிரிழந்த 5 பேர்..!



wall accident in college

குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் கிருஷ்ணா கலைக்கல்லூரியில்,  சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. ஒரே வளாகத்தில் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த சுற்றுச்சுவர் கட்டும் பணி, கட்டுமான பணியின் போது திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதனால் மூன்று தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனை தொடர்ந்து,மருத்துவமனைக்கு செல்லும் வழியில் ஒருவர் பலியாகி உள்ளார். பின், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றொரு பலி. இதனால் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சுற்று சுவர், ஏரியை ஆக்கிரமித்து  கட்டப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களில் மூன்று பேர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இரண்டு பேரும் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளார். சுற்றுச்சுவர் கட்டுவதற்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட ஆட்சியர் அதிகாரிகள் ஆய்வு நடத்திவருகிறார்கள்.