ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம்... அதிகாரிகள் அதிரடி ஆய்வு...

ஆன்லைனில் ஷவர்மா ஆர்டர் செய்து சாப்பிட்ட இளைஞருக்கு வாந்தி மயக்கம்... அதிகாரிகள் அதிரடி ஆய்வு...


vomiting-for-a-teenager-the-food-safety-department-is-in-action-to-close-the-shop-that-sold-shawarma

கோவை மாவட்டம் அன்னூர் சத்தியமங்கலம் சாலையில் கடை ஒன்றை நடத்தி வருபவர் ஆண்ட்ரூஸ் என்ற 28 வயது இளைஞர். இவர் நேற்று முன்தினம் கடையில் இருக்கும் போது ஆன்லைன் மூலம் ஷவர்மா ஆர்டர் செய்து வாங்கியுள்ளார்.

அந்த ஷவர்மாவை ஆண்ட்ரூஸ் சாப்பிட்ட சில நிமிடத்திலேயே வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அதனையடுத்து அவர் சாப்பிட்ட ஷவர்மாவை நுகர்ந்து பார்த்த போது அதில் கெட்டுப்போன வாசம் வந்துள்ளது. உடனே தனது நண்பர்களுடன் ஷவர்மா ஆர்டர் செய்த கடைக்கு சென்று இது குறித்து கேட்டுள்ளார் ஆண்ட்ரூஸ்.

Shawarma

அதற்கு கடை உரிமையாளர் முறையாக பதிலளிக்காததால் இந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் தகவல் அளிக்கப்பட்டது. அதனையடுத்து விரைந்து வந்து அதிகாரிகள் கடையில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். 

அப்போது அங்கு காலாவதியான மசாலா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், கடை சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக தெரிவித்து, கடையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.