கோவில் திருவிழாவுக்கு பேனர் வைத்தபோது சோகம்; மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் மரணம்.!Virudhunagar Watrap College Student Died Electric Attack 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்திராயிருப்பு, வணிக வைசியர் தெருவில் வசித்து வருபவர் கலியானாண்டி. இவரின் மகன் கல்யாண் குமார் (வயது 18). கிருஷ்ணன் கோவில் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு பயில்கிறார். 

சம்பவத்தன்று வத்திராயிருப்பு மந்தை மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு பேனர் அடித்துள்ளார். இதனை வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் வைக்கமுயன்ற போது, மின்சார கம்பி மீது பேனர் உரசியதில் கல்யாண் குமார் பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.