திருவிழாக்கள் நடக்கும் கோவில்கள் டார்கெட்: 6 பேர் கும்பலை 5 மாதங்கள் கடந்து தட்டித்தூக்கிய காவல்துறை.! 

திருவிழாக்கள் நடக்கும் கோவில்கள் டார்கெட்: 6 பேர் கும்பலை 5 மாதங்கள் கடந்து தட்டித்தூக்கிய காவல்துறை.! 



Virudhunagar Srivilliputhur Jewel Theft Case Police Arrest Team Of members 

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர், இடையபொட்டல் தெருவில் வசித்து வருபவர் இராமர். இவரின் மனைவி சுமதி (56). கடந்த ஜூலை மாதம் 01ம் தேதி மடவார்வளாகத்தில் உள்ள வைத்தியநாத சாமி கோவிலுக்கு சென்றிருந்தார். 

அச்சமயம், அவரின் கழுத்தில் இருந்த 3 சவரன் தங்க நகை மாயமானது. இந்த விஷயம் தொடர்பாக திருவல்லிபுத்தூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, செயின் பறிப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை, வீரப்பூர் பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து, காவல் உதவி ஆய்வாளர் ரவி தலைமையிலான தனிப்படை அதிகாரிகள் மணப்பாறை விரைந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியை சேர்ந்த முருகன் (55), அவரின் மனைவி அலமேலு (45) ஆகியோரை கைது செய்தனர். 

இவர்களுடன் தங்கியிருந்த கோவில்பட்டியை சேர்ந்த பொன்னுமணி (வயது 32), மாரிமுத்து (வயது 26), செல்வி (வயது 34), நாகம்மாள் (வயது 57) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடம் நடந்த விசாரணையில், கோவில் திருவிழாக்கள் நடைபெறும் ஊர்களுக்கு குழுவாக சென்று திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 

அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.