கடன் வாங்கியதால் வந்த பிரச்சனை; கந்துவட்டி தொல்லையால் தம்பதி விரக்தி.!Virudhunagar SP Office Couple Complaint 

 

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், கந்துவட்டி காரணமாக பாதிக்கப்பட்ட தம்பதி, தங்களின் புகார் கோரி நடவடிக்கை எடுக்கக்கூறி புகார் அளித்தனர். 

இந்த விஷயம் குறித்து தம்பதிகள் தெரிவிக்கையில், "விருதுநகர் பர்மா காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி. அவர் சத்துணவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். தம்பதிகளுக்கு நவீன் என்ற மகன் மற்றும் 19 வயது மகள் இருக்கின்றனர். 

இதையும் படிங்க: பள்ளிக்கு செல்லவிருந்த மகன் கண்முன் துள்ளத்துடிக்க உயிரிழந்த தந்தை; தர்மபுரியில் சோகம்.!

கடன் வாங்கி கந்துவட்டி பிரச்சனை

இந்நிலையில், நவீன் கல்லூரியில் கேண்டீன் அமைக்க, விழுப்புரம் பகுதியை சேர்ந்த டிஎம்பி பேங்க் மேனேஜர் ராஜீஷ், அவரது மனைவி ஜெயந்தியிடம் ரூ.4 இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். 

வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வந்த நிலையில், ரூ.7 இலட்சம் தரவேண்டும் என தொந்தரவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன தம்பதி தற்போது கந்துவட்டி பிரச்சனையால் பாதிக்கப்பட்டு தற்போது புகார் அளித்துள்ளார். 

இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். 

இதையும் படிங்க: வெளிநாடு வேலைக்கு செல்ல மறுத்து அடம்; தாயின் அறிவுரையால் இளைஞர் தற்கொலை.!