ஆங்கில புத்தாண்டில் சோகம்... சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!!

ஆங்கில புத்தாண்டில் சோகம்... சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடித்து விபத்து.. 4 பேர் பலி.!!


Virudhunagar Sivakasi Near Paraipatti Firecrackers Factory Accident 4 Died

பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 4 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இவை அவ்வப்போது திடீரென வெடித்து சிதறுவது வாடிக்கையாகியுள்ளது. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பலரும் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றனர். 

இந்நிலையில், விருதுநகர் சிவகாசி அருகேயுள்ள புதுப்பட்டி, பாறைப்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலை வெடித்து சிதறியுள்ளது. இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையில் பணியாற்றி வந்த 4 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த 4 பேர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Virudhunagar

இன்று 30 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், விபத்து நடந்துள்ளது. சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.