புதுக்கோட்டையில் தடையை மீறி கொட்டகை அமைத்து விநாயகர் சிலை வைத்த சிறுவர்கள்!

புதுக்கோட்டையில் தடையை மீறி கொட்டகை அமைத்து விநாயகர் சிலை வைத்த சிறுவர்கள்!


vinayagar statue in pudukkottai

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான விநாயகர் சதுர்த்தி இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வழக்கமாக விநாயகர் சதுர்த்தி தினத்தில் பல இடங்களில் பெரிய அளவிலான விநாயகர் சிலையை வைத்து, அதற்கு பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கம். 

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சிலைகளை பொது இடத்தில் வைத்து வழிபாடு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாகச் சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தடை விதிக்கப்பட்டது. வீடுகளில் வைத்து வழிபடப்படும் விநாயகர் சிலைகளைத் தனிநபர்கள் நீர்நிலைகளில் கரைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Vinayagar

இதனையடுத்து வீடுகளில் சிலைகளை வைத்து வழிபட அறிவுறுத்தி உள்ளது. இந்தநிலையில் அரசின் தடை உத்தரவை தொடர்ந்து எங்காவது விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளதாக என்று அதிகாரிகளும், போலீசாரும் கண்காணித்து வருகின்றனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னச்சத்திரம் பகுதியில் சிறுவர்கள் சிலர், கொட்டகை அமைத்து அதில் 2 அடி உயரமுள்ள விநாயகர் சிலையை வைத்துள்ளனர். இதனைப்பார்த்த வருவாய் கோட்டாட்சியர் போலீசாரை வரவழைத்து அங்கிருந்த சிறுவர்களை எச்சரிக்கை செய்ததோடு, விநாயகர் சிலையை அகற்றி எடுத்து சென்றனர்.