"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
14 வயது சிறுமியை சீரழித்து கர்ப்பமாக்கிய கொடூரம்.. தாயின் கள்ளக்காதலனால் நடந்த பேரதிச்சி சம்பவம்.!
கள்ளகாதலியின் மகளை ஒரு வருடமாக சீரழித்து வந்த கயவன், 14 வயது சிறுமி கர்ப்பமான காரணத்தால் சிக்கிக்கொண்ட பகீர் சம்பவம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் தொட்டி கிராமத்தில் உள்ள குடிசைப்பகுதியில் வசித்து வருபவர் மூர்த்தி (வயது 40). இவர் கூலித்தொழிலாளி ஆவார். மூர்த்தியின் மனைவி கருத்து வேறுபாட்டினால் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அவர் குடும்பத்தை பிரிந்து சென்று தனியே வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில வருடத்திற்கு முன்னதாக மூர்த்திக்கும், கணவரை பிரிந்து மகளுடன் வசித்து வந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறவே, இளம்பெண்ணுடன் மூர்த்தி தனிக்குடித்தனம் நடத்த தொடங்கியுள்ளார்.
இளம்பெண்ணின் மகளும் தனது தாய் மற்றும் மூர்த்தியுடன் தங்கியிருந்த நிலையில், அந்த 14 வயது சிறுமி கர்ப்பிணியாக இருப்பது உறுதியானது. இதனால் அதிந்துபோன சிறுமியின் தாய் தனது மகளிடம் விசாரித்துள்ளார். அப்போது, சிறுமியிடம் கடந்த வருடத்தில் இருந்து மூர்த்தி அத்துமீறலில் ஈடுபட்டது அம்பலமானது.
இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.