
Summary:
வரவு, செலவு கணக்குகளை தெரிவிக்க பேனர்.. அசத்தும் ஊராட்சி... பெயர் விளம்பரம் வேண்டாம்பா..!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கானை ஊராட்சி ஒன்றியம், கல்யாணம்பூண்டி ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகளை மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர் சார்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பேனரில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருந்து, நடப்பு வருடம் மார்ச் மாதம் வரையிலான ஊராட்சி வரவு மற்றும் செலவு கணக்குகள் எழுதப்பட்டுள்ளது. அதன் வாயிலாக ஊராட்சியின் வரவு, செலவு கணக்குகள் மக்களுக்கு எடுத்துரைக்கப்ட்டுள்ளது.
இந்த பேனரை வைத்துள்ள ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர், தங்களின் பெயரை வைத்து விளம்பரம் செய்ய விருப்பப்பட்டதாக தெரியவில்லை. அதனால் அவர்களின் பெயரை கூட குறிப்பிடாமல் தங்களின் பொறுப்பை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement