கணவனை விட்டு முன்னாள் காதலனை கரம்பிடித்த இளம்பெண்; செஞ்சி அருகே பரபரப்பு சம்பவம்.!

கணவனை விட்டு முன்னாள் காதலனை கரம்பிடித்த இளம்பெண்; செஞ்சி அருகே பரபரப்பு சம்பவம்.!


viluppuram-gingee-girl-married-his-love-boy-after-anoth

 

சிறார் திருமணம் செய்து வைத்த பெற்றோரால் ஒரு வருடம் அமைதிகாத்த பெண்மணி, 18 வயது ஆனதும் காதலனை கரம்பிடித்த சம்பவம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கொளப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சி ராணி. இவர் அப்பகுதியை சேர்ந்த ஞானமுத்து என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் ஜான்சி ராணியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது. 

அப்போது சிறுமி 18 வயது பூர்த்தியாகாமல் இருந்த நிலையில், பெற்றோரின் ஏற்பாட்டில் கிளிண்டன் என்பவருடன் கட்டாய திருமணம் நடைபெற்றுள்ளது. 18 வயது ஆகும் வரை காத்திருந்த ஜான்சிராணி, சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார்.

Viluppuram 

கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியேறிய பெண்மணி, காதலனுடன் திருமணம் செய்து அறங்கண்டநல்லூர் காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்திய நிலையில், ஞானமுத்துவின் தாயாருடன் ஜான்சி ராணியை அனுப்பி வைத்துள்ளனர்.