அரசியல் தமிழகம்

விஜயகாந்த் மகன் கூறிய ஒத்த வார்த்தை!! துள்ளி குதித்த மக்கள்!!

Summary:

vijayakanth son speech

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தேமுதிகவின் கொடிநாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட விஜயகாந்தின் மகன் நிகழ்ச்சியில் பேசும்போது, கடந்த காலங்களில் காவிரி டெல்டா பகுதிகளில் 58 சதவீதம் விவசாயம் நடைபெற்றதாகவும், தற்போது 7சதவீதம் தான் விவசாயம் நடைபெறுவதாகவும் கூறினார்.

விஜயகாந்த் ஆட்சிக்கு வந்தால் காவிரியில் தண்ணீர் கண்டிப்பாக வரும், பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்பார், அப்படி செய்யாவிட்டால், சட்டையை பிடித்து கேட்கலாம் என கூறினார். 

விஜயகாந்த் ஒளிந்துவிட்டார், என்று  கூறியவர்கள் எல்லாம் தற்போது தனது தந்தையிடம் கூட்டணி வைத்துக்கொள்ள வீட்டில் வந்து நிற்கிறார்கள் என்றும், வருங்காலத்தில் பிரதமர் யார் என்றும் முதல்வர் யார் என்றும் தீர்மானிப்பது தேமுதிகதான் என கூறினார்.

vijayakanth son க்கான பட முடிவு

தற்போது தமிழகத்திற்காக டெல்லியில் குரல் கொடுக்க  சரியான தலைவர் இல்லை. தமிழ்நாட்டிற்கு வேண்டிய திட்டங்களை செய் என்று சொல்லும் தலைவரை நீங்கள் கொண்டு வரவேண்டும். தற்போது உள்ளவர்களை போல் மாட்டிக்கொள்வோம் என அடங்கி போகும் தலைவர் அல்ல விஜயகாந்த். எதையும் துணிச்சலாக தட்டி கேக்கும் தலைவர் தான் விஜயகாந்த். பன்றிகள் தான் கூட்டமாக வரும். விஜயகாந்த் எப்போதும் சிங்கம் போல் தான் வருவார்.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில், யாராலும் தவறு கூறமுடியாத தலைவனாக கேப்டன் விஜயகாந்த் உள்ளார். அவர் மீது யாராலும் எந்த குற்றமும் கூற முடியாது. அது அணைத்து மக்களுக்கும் தெரியும். இதை மனதில் வைத்துக்கொண்டு நல்ல முடிவை மக்களே எடுங்கள் என விஜயபிரபாகரன் கூறினார்.


Advertisement