அரசியல் தமிழகம் சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி - வீடு திரும்பினார் கேப்டன் விஜயகாந்த்; தொண்டர்கள் நிம்மதி

Summary:

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், உடல்நலக்குறைபாடு காரணமாக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். சமீபத்தில் கூட அமெரிக்காவில் சிகிச்சை பெற்று நாடு திரும்பினார். 

இந்நிலையில் நேற்று நேற்று முன்தினம் சென்னை மனப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து தே.மு.தி.க வெளியிட்ட அறிக்கையில், `விஜயகாந்த் நலமுடன் உள்ளார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்' என அறிவித்துள்ளது.

vijayakanth க்கான பட முடிவு

மேலும் அவரின் மூத்த மகன் விஜய் பிரபாகரன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ``அப்பா உடல்நிலைகுறித்துப் பல்வேறு வதந்திகள் பரவிவருகின்றன. ஆனால், அப்படி ஒன்றுமே இல்லை. அவர் நலமாக உள்ளார்" என கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். 

இதற்கிடையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் உடல்நிலை ஓரளவு சீரடைந்ததை தொடர்ந்து, அவர் நேற்று பிற்பகல் 3 மணியளவில் வார்டுக்கு மாற்றப்பட்டார். விஜயகாந்த் வேகமாக குணமடைந்து வருவதாகவும், ஆஸ்பத்திரியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என்றும் ‘மியாட்’ ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்தநிலையில், சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் வீடு திரும்பினார்.


Advertisement