தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
கைவிடப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு விஜயகாந்த் பெயர்; குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் நெகிழ்ச்சி செயல்.!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று துணியால் சுற்றப்பட்டு மீட்கப்பட்டது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்ற பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையை பத்திரமாக மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். தற்போது குழந்தை பாதுகாப்பாக உள்ளது.
குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என காப்பக நிர்வாகிகள் மற்றும் குழந்தை அமைப்பினர் யோசித்துக் கொண்டிருந்த நிலையில், நடிகர் விஜயகாந்த் இறந்த நாளில் குழந்தையை கண்டெடுத்ததால் "விஜயா" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.