விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் அதிர்ச்சி: கோயம்பேட்டில் குவிந்த பொதுமக்கள், தொண்டர்கள் மீது தடியடி.!vijayakanth-funeral-function-police-lathi-charge

 

மறைந்த தேமுதிக தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் அவர்களின் உடல் சென்னையில் உள்ள அவரது கட்சி தலைமையகத்தில் நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் தேமுதிக கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் குவிந்திருக்கின்றனர்.

இதனால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அவரின் உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதால் காவல்துறையினர் தேமுதிக அலுவலகத்தை முழுவதுமாக தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

Latest news

இதனிடையே நல்லடக்கம் செய்யப்படும் நிகழ்வில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டதால் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் மட்டுமே அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நிகழ்விடத்திற்கு விரைந்த பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள் பலரும் அங்கிருந்து கலைந்து செல்ல கூறி அறிவுறுத்தப்பட்டனர். 

ஆனால் அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால், காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி அனைவரையும் அங்கிருந்து விரட்டி அடித்தனர். இந்த சம்பவத்தால் கோயம்பேடு பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.